உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சூ.ராயபுரத்தில் கபடி போட்டி

சூ.ராயபுரத்தில் கபடி போட்டி

ரிஷிவந்தியம்: சூ.ராயபுரத்தில் வரும் 25ம் தேதி கபடி போட்டி நடைபெறுகிறது.ரிஷிவந்தியம் அடுத்த சூ.ராயபுரம் புனித லுார்து அன்னை ஆலய வளாகத்தில், மேரி பிரதர்ஸ் அணி சார்பில் 39ம் ஆண்டு கபடி போட்டி வரும் 25ம் நடைபெறுகிறது. விளையாட விருப்பமுள்ள, கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த அணியினர் நுழைவுக்கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். வெளி மாவட்டத்தை சேர்ந்த அணியினர் நுழைவுக்கட்டணம் செலுத்த தேவையில்லை.போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.20 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.16 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.12 ஆயிரம், நான்காம் பரிசாக ரூ.8 ஆயிரம் வழங்கப்படும். மேலும், ஆறுதல் மற்றும் சிறப்பு பரிசாக தலா ஒரு அணிக்கு 5,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. முன்பதிவு செய்ய 89400 83144, 76396 76228 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி