உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பாரதி மகளிர் கல்லுாரியில் கம்பன் கழக பெருவிழா

பாரதி மகளிர் கல்லுாரியில் கம்பன் கழக பெருவிழா

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பாரதி மகளிர் கலை-அறிவியல் கல்லுாரியில் கம்பன் கழக பெருவிழா நடந்தது.கள்ளக்குறிச்சி மாவட்ட கம்பன் கழகம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, கம்பன் கழக தலைவர் சுலைமான் தலைமை தாங்கினார். பாரதி கல்வி நிறுவன தாளாளர் கந்தசாமி, செயலாளர் லட்சுமி கந்தசாமி, ஆக்சாலிஸ் பள்ளி தாளாளர் பரத்குமார் முன்னிலை வகித்தனர். செயலாளர் மதிவாணன் வரவேற்றார்.கம்பன் கழக கவிஞர்கள் கோமுகி மணியன், திருநாராயணன், கோவிந்தராஜன், சண்முகசுந்தரம், நடராஜன் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கினர். ராபியாபேகம் துவக்கவுரையாற்றினார். தமிழக அரசின் சிறந்த எழுத்தாளர் விருது பெற்ற திருப்பூர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் தலைமை ஆசிரியர் அறிவழகன், ஆசிரியை தமிழரசி பங்கற்று பேசினர். கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்தி பரிசு வழங்கினர். பொருளாளர் அம்பேத்கர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை