மேலும் செய்திகள்
ஜெர்மனி பேராசிரியருக்கு எஸ்.என்.எஸ்., வரவேற்பு
11-Jul-2025
கள்ளக்குறிச்சி: இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் கார்கில் வெற்றி தின நிகழ்ச்சி நடந்தது. இந்திலி ஆர்.கே.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, என்.சி.சி., சார்பில் நடந்த கார்கில் வெற்றி தின நிகழ்ச்சிக்கு ஆர்.கே.எஸ்., கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் மனோபாலா தலைமை தாங்கினார். இயக்குனர் அனந்தராம் பாபு முன்னிலை வகித்தார். என்.சி.சி., அலுவலர் அன்பரசு வரவேற்றார். கல்லுாரி முதல்வர் மோகனசுந்தரம் சிறப்புரையாற்றினார். துணை முதல்வர் ஜான் விக்டர், பேராசிரியர் அசோக் வாழ்த்துரை வழங்கினர். கார்கில் போரில் வீரமரணம் அடைந்த எல்லை பாதுகாவலர்களுக்கு மாணவர்கள் மரியாதை செலுத்தி, மரக்கன்றுகள் நட்டனர். இதில் கல்லுாரி என்.சி.சி., மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். என்.சி.சி., மாணவர் திவாகர் நன்றி கூறினார்.
11-Jul-2025