உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சின்ன முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

சின்ன முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே, சின்ன முத்து மாரியம்மன் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.உளுந்துார்பேட்டை அடுத்த கல்பாதுார் கிராமத்தில், சின்னமுத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமம், வாஸ்து ஹோமம், கோமாதா பூஜை, யாக சாலை பிரவேசம், வேத பாராயணம் உள்ளிட்டவைகளுடன் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. தொடர்ந்து நேற்று யாக சாலை பூஜை உட்பட பல்வேறு வழிபாடுகள் நடைபெற்றன. நேற்று காலை 7:30 மணிக்கு, கடம் புறப்பாடு நடைபெற்றது.இதையடுத்து, கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. மேலும், மூலவருக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை