உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கூலி தொழிலாளி தற்கொலை

கூலி தொழிலாளி தற்கொலை

கள்ளக்குறிச்சி : குடும்ப பிரச்னையில் கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். கள்ளக்குறிச்சி அடுத்த மோகூரை சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் மாரியாப்பிள்ளை,45; விவசாய கூலித்தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், அடிக்கடி குடும்பத்தினருடன் பிரச்னை ஏற்பட்டு வந்தது. கடந்த 9ம் தேதி மதுபோதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில், மனமுடைந்தவர் களைக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து, மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை