கூலித் தொழிலாளி தற்கொலை
தியாகதுருகம்: தியாகதுருகத்தில் கூலி தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தியாகதுருகம் அண்ணாநகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் வெற்றிவேல், 59; மனைவி தேவிகா, 56; இருவரும் கூலி தொழிலாளிகள். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த ஜூன் மாதம் தேவிகா கோபித்துக் கொண்டு பெரம்பலுாரில் உள்ள தனது மகள் தனலட்சுமி வீட்டிற்கு சென்றார். இதனால் மன வேதனையில் இருந்த வெற்றிவேல் நேற்று காலை தனது வீட்டில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின்பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.