உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  கூலித்தொழிலாளி தற்கொலை

 கூலித்தொழிலாளி தற்கொலை

ரிஷிவந்தியம்: வாணாபுரத்தில் விவசாய கூலித் தொழிலாளி துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். வாணாபுரத்தைச் சேர்ந்தவர் நடேசன் மகன் சுப்ராயன், 60; விவசாய கூலித்தொழிலாளி. குடிப்பழக்கம் இருப்பதால் உடல்நலம் பாதித்தது. கடந்த 7ம் தேதி இரவு 8:00 மணியளவில் போதையில் இருந்த சுப்ராயன் தனது நிலத்தில் உள்ள மின்கம்பத்தில் துாக்கு போட்டுக்கொண்டார். உடன், சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். புகாரின் பேரில் பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ