மேலும் செய்திகள்
கார்கள் மோதல் 2 பேர் படுகாயம்
29-Jun-2025
சின்னசேலம், : சின்னசேலம் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த கூலி தொழிலாளி இறந்தார். சின்னசேலம் அடுத்த புக்கிரவாரி கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ் மகன் செந்தில், 48; விவசாய கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் மதியம் 1:00 மணிக்கு, தனது மகனுக்கு சொந்தமான பைக்கில் மேலுார் அரசு மருத்துவமனைக்கு சென்று மீண்டும் வீடு திரும்பினார். சிறுவத்துார் கிராமம் அருகே வந்தபோது, நிலை தடுமாறி பைக்கிலிருந்து கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த செந்தில் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில், சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
29-Jun-2025