உள்ளூர் செய்திகள்

லேப்டாப் திருட்டு

கள்ளக்குறிச்சி : திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியை சேர்ந்தவர் சங்கர் மகன் ஸ்ரீராம்,18; இவர், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை விடுதியில் தங்கி, எம்.பி.பி.எஸ்., இரண்டாமாண்டு படிக்கிறார். கடந்த 6ம் தேதி விடுதியில் தனது லேப்டாப்பை வைத்து விட்டு ஸ்ரீராம் கல்லுாரிக்கு சென்றார். வகுப்பு முடிந்து வந்து பார்த்த போது லேப்டாப் காணவில்லை. மாணவ் ஸ்ரீராம் அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி