மேலும் செய்திகள்
வருவாய் பணிகள் கலெக்டர் ஆய்வு
14-Mar-2025
கடலுாரில் சட்டம், ஒழுங்கு ஐ.ஜி., ஆலோசனை
26-Mar-2025
இதுவும் சட்ட ஒழுங்கு பிரச்சனை தான்!
25-Mar-2025
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில், சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மாதாந்திர கூட்டத்தில், எஸ்.பி., ரஜத் சதுர்வேதி முன்னிலை வகித்தார். இதில், இம்மாதத்தில் நடந்த சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் மற்றும் பாதிப்பு ஏற்படக் கூடிய நிகழ்வுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.மேலும் வரும் ஏப்ரல் மாதம் நடக்க உள்ள ஆரப்பாட்டங்கள், பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ள நிகழ்வுகள் குறித்து கலெக்டர் கேட்டறிந்து பிரச்சனை ஏற்படாத வகையில், நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா, திருக்கோவிலுார் சார் ஆட்சியர் ஆனந்த்குமார் சிங், கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனலட்சுமி, ஆர்.டி.ஓ., லுார்துசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
14-Mar-2025
26-Mar-2025
25-Mar-2025