மேலும் செய்திகள்
சட்டம் ஒழுங்கு பிரச்னை தொடர்பாக ஆய்வு கூட்டம்
16-Sep-2025
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு ஆய்வுக் கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பொதுப்பாதை பயன்பாடு, ஊராட்சி நுாலகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருதல், பழுதடைந்துள்ள தெரு மின் விளக்குகளை பழுது நீக்குதல், சிமென்ட் சாலை அமைத்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள நிகழ்வுகள் குறித்தும், சட்டம் ஒழுங்கு பராமரிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அறிவுறுத்தப்பட்டது. ஏற்கனவே நடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டவை குறித்து கலெக்டர் விபரங்கள் கேட்டறிந்தார். கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா, திருக்கோவிலுார் சப்கலெக்டர் ஆனந்த்குமார்சிங், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனலட்சுமி, போலீஸ் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
16-Sep-2025