ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் சட்ட நாள் கருத்து ஊக்க விழா
கள்ளக்குறிச்சி: ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் சட்ட நாள் கருத்து ஊக்க விழா கருத்தரங்கம் நடந்தது.கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் நடந்த கருத்தரங்கிற்கு, கல்வி நிறுவனங்களின் செயலாளர் கோவிந்தராஜூ தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் ஜான்விக்டர் வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராக கல்லுாரியின் முன்னாள் கல்வி இயக்குநர் மதிவாணன், செம்மொழி தமிழாய்வு நடுவண் நிறுவனத்தின் முன்னாள் பதிவாளர் முத்துவேலு, நுகர்வோர் மன்ற செயலாளர் அருண்கென்னடி, மக்கள் உரிமை மற்றும் பாதுகாப்பு சங்க நிர்வாகி சுப்ரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.தமிழர் மரபில் சட்ட நெறிகள், சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, பெரியபுராணம், அண்ணல் அம்பேத்கரின் சட்ட வல்லமை உட்பட பல்வேறு தலைப்புகளில் சிறப்புரையாற்றினர். தொடர்ந்து, மாணவர்களின் பட்டிமன்றம் மற்றும் பேச்சு, கட்டுரை போட்டிகள் நடந்தது.உதவி பேராசிரியர்கள் கோமதி, சுபலட்சுமி, சுரேந்திரன் வணிகவியல் துறைத்தலைவர் அருள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ்த்துறை தலைவி பிரவீனா நன்றி கூறினார்.