சாராய வியாபாரி தடுப்பு காவலில் கைது
கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராய வியாபாரி, தடுப்பு காவலில் கைது செய்யப்பட்டார்.கல்வராயன்மலை அடுத்த ஈச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் அருணாசலம் மகன் பொன்னுதுரை,37; கள்ளச்சாராய வியாபாரியான இவர் மீது பல வழக்கு உள்ளது. இந்நிலையில் சமீபத்தில், ஈச்சங்காட்டில் கள்ளச்சாராயம் விற்றபோது கரியாலுார் போலீசார் கைது செய்தனர்.இவரது நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு எஸ்.பி., ரஜத்சதுர்வேதி பரிந்துரையை ஏற்று, பொன்னுதுரையை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டார். இதையடுத்து, பொன்னுதுரையை தடுப்புக் காவலில் கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.