மேலும் செய்திகள்
மணல் கடத்தல் சிறுவன் உட்பட 2 பேர் கைது
22-Sep-2024
திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் அடுத்த வீரபாண்டியில் எஸ்.பி., தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் சாராய சோதனையில் ஈடுபட்டனர். கள்ளச்சாராயம் காய்ச்சுவது, விற்பனை செய்வதை முற்றிலும் ஒழிக்க எஸ்.பி., தீபக் சிவாச் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக நேற்று எஸ்.பி., தலைமையில், ஏ.டி.எஸ்.பி., ரவீந்தர்குமார் குப்தா மேற்பார்வையில், மதுவிலக்கு அமல் பிரிவு டி.எஸ்.பி., கந்தசாமி, அரகண்டநல்லுார் இன்ஸ்பெக்டர் ஷாகுல் ஹமீது, சப் இன்ஸ்பெக்டர்கள் குருபரன், சின்னப்பன் மற்றும் 50க்கும் மேற்பட்ட போலீசார் நாவந்தாங்கல் ஏரி மற்றும் புதர் மண்டிய பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். மாலை வரை நடந்த சோதனையில் எதுவும் சிக்கவில்லை.
22-Sep-2024