உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / எழுத்தறிவு திட்ட மண்டல கொண்டாட்டம் நிறைவு விழா

எழுத்தறிவு திட்ட மண்டல கொண்டாட்டம் நிறைவு விழா

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நடந்த புதிய பாரத எழுத்தறிவு திட்ட மண்டல அளவிலான எழுத்தறிவு கொண்டாட்டம் நிறைவு விழா நடந்தது.நிகழ்ச்சிக்கு பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக இயக்குனர் நாகராஜ முருகன் தலைமை தாங்கி பேசினார். முதன்மைக் கல்வி அலுவலர் கார்த்திகா, மாவட்ட கல்வி அலுவலர் ரேணுகோபால் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில், பரதநாட்டியம், பல்லாங்குழி, செஸ் உட்பட 40 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார் மாவட்டங்களைச் சேர்ந்த கற்போர், தன்னார்வலர்கள், உதவி திட்ட அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.உதவி திட்ட அலுவலர் பழனியாப்பிள்ளை நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி