உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / இலக்கிய தொடர் சொற்பொழிவு

இலக்கிய தொடர் சொற்பொழிவு

கள்ளக்குறிச்சி, ; கள்ளக்குறிச்சியில் கல்லைத் தமிழ்ச் சங்க இலக்கிய தொடர் சொற்பொழிவு நடந்தது.சங்கத் தலைவர் புகழேந்தி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் அம்பேத்கர், சிறப்பு தலைவர் கோமுகி மணியன், நல்லாசிரியர் முருகன், பாரதிபணி செல்வர் முன்னிலை வகித்தனர்.இணைச் செயலாளர் மகேந்திரன் வரவேற்றார். அப்துல் ஹமீதின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் சொற்பொழிவு துவங்கியது.மாணவர்கள் தமிழமுதன், தமிழினியன், கவிஞர் ஜெயப்பிரகாஷ், ஓய்வு பெற்ற டி.இ.ஓ., ஜெயராமன், டாக்டர் உதயகுமார், தியாகதுருகம் கம்பன் கழக நிறுவனர் நடேசன், புலவர் லட்சுமிபதி ஆகியோர் சொற்பொழிவாற்றினர்.தியாகதுருகம் வெங்கடாசலபதிக்கு எழுத்தாளர் விருது வழங்கப்பட்டது. சங்க செயலாளர் மதிவாணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். துணைச் செயலாளர் முத்துசாமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி