உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சுமை துாக்கும் தொழிலாளர்கள் தர்ணா

சுமை துாக்கும் தொழிலாளர்கள் தர்ணா

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் நுகர் பொருள் வாணிபக் கழகத்தில் சுமை துாக்கும் தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கராபுரத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு உள்ளது. இங்கிருந்து லாரிகளில் ரேசன் கடைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது. இங்கு வேலை செய்யும் 20க்கும் மேற்பட்ட சுமை துாக்கும் தொழிலாளர்கள்  சங்க அங்கீகார தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். வருகை பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டும். நிலுவையில் உள்ள கூலி உயர்வை வழங்க வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி  அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து நேற்று காலை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் பாலமுரளி, சப் இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதின் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை