உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / லாட்டரி சீட்டு மொத்த வியாபாரி கைது

லாட்டரி சீட்டு மொத்த வியாபாரி கைது

திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் லாட்டரி சீட்டு மொத்த வியாபாரியை போலீசார் கைது செய்தனர். திருக்கோவிலுார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை கொடி கட்டி பறக்கிறது. இது குறித்த செய்தி தினமலரில் நேற்று முன்தினம் வெளியானது. இந்நிலையில் நேற்று திருக்கோவிலுார் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் அஜித்குமார் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். நான்கு முனை சந்திப்பு அருகே சந்தேகத்திற்குரிய நபரை பிடித்து விசாரித்ததில், அவரிடமிருந்து 37 லாட்டரி சீட்டுகள் கைப்பற்றப்பட்டன. அவர், திருக்கோவிலுார், கிழக்கு வீதியை சேர்ந்த வேலாயுதம் மகன் பாலச்சந்தர், 47; என்பதுதெரியவந்தது. விசாரணையில், அவரது மொபைலில், வரும் 15ம் தேதி வரை குலுக்கல் நடைபெறும் வகையிலான 3,200 லாட்டரி சீட்டுகள் அடங்கிய பி.டி.எப்., பைல்கள் இருந்ததும், அவர்அதை தினசரி பிரிண்ட் எடுத்து விற்பனை செய்து வந்ததும் கண்டறியப்பட்டது. அவரை கைது செய்த போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ