சலவைத் தொழிலாளர்களுக்கு எல்.பி.ஜி., இஸ்திரி பெட்டிகள்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட சலவைத் தொழிலாளர்களுக்கு எல்.பி.ஜி., இஸ்திரி பெட்டிகள் வழங்கப்படும்.கலெக்டர் பிசாந்த் செய்திக்குறிப்பு:குடும்ப ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்குள் உள்ள ஏழை, எளிய பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன சலவை தொழில் செய்யும் தொழிலாளர்களின் நலனுக்காக எல்.பி.ஜி., எனும் திரவ பெட்ரோலிய வாயு மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டிகள் வழங்கப்படுகின்றன.இஸ்திரி பெட்டிகளைப் பெற மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களைப் பெற்று விண்ணப்பித்து பயனடையலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.