உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / என்றென்றும் மக்களுடன் மதி அகாடமி

என்றென்றும் மக்களுடன் மதி அகாடமி

திருக்கோவிலுாரில் கல்வி, விளையாட்டு, சேவை திட்டங்கள் என பொதுப்பணியில் ஈடுபடுத்திக் கொண்டு மக்கள் நலன் விரும்பும் செயல்களை மதி அகாடமி என்ற பெயரில் மதிவாணன் மேற்கொண்டு வருகிறார். இது குறித்து அவர் கூறியதாவது. திருக்கோவிலுார் கோவில் நகர அரிமா சங்கத்தில் தலைவரில் துவங்கி பல்வேறு பதவிகளுடன் சங்க செயல்பாட்டில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, ஆர்வமுடன் செயல்பட்டதன் காரணமாக, பல்வேறு விருதுகள் கிடைத்துள்ளது. சேவையைப் பாராட்டி வழங்கப்பட்ட தேசிய விருதுகள் 12, அரிமா விருதுகள் 90, பன்னாட்டு விருதுகள் 15, மாவட்ட மற்றும் மாநில அளவிலான விருதுகள் 42 என மொத்தம் 176க்கும் மேற்பட்ட விருதுகள் கிடைத்துள்ளது. அரிமா சங்க தலைவராக இரண்டு முறை செயலாற்றி டாப் 10 இடத்தை பெற்றுள்ளேன். இவையெல்லாம் எனது சேவையை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதால், அரிமா சங்க சேவையை மட்டுமல்லாது மு.பா.மெமோரியல் டிரஸ்ட், மதி அகாடமி பெயரில் பல ஏழை, எளிய மக்களுக்கு உதவிகளை செய்யும் ஒரு துாண்டுகோலாக அமைந்திருக்கிறது. வித்யா மந்திர் எஜூகேஷன் டிரஸ்ட் செயலாளர், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி உறுப்பினர், அரிமா சங்க வந்தவாசி இணை உறுப்பினர், திருக்குறள் கழக அறக்கட்டளை உறுப்பினர், திருக்கோவிலுார் நகர பொது நுாலக புரவலர், விழுப்புரம் பாவேந்தர் பேரவை உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளுடன் சேவை மேற்கொண்டு வருகிறேன். இதற்கெல்லாம் அடித்தளமாக இருந்தது கல்வி. எட்டாக்கனியாக இருக்கும் அந்த கல்வியை கீழ் நிலையில் இருக்கும் மாணவர்களும் பெற்று சமுதாயத்தில் உயர்நிலை அடைய வேண்டும் என்ற நோக்கில், மாணவர்களுக்கு பல்வேறு வகையிலும் கல்வி சேவையாற்றி வருகிறேன். தனக்கு உறுதுணையாக எனது மகன் பொறியாளர் மதிமாறன் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு மதிவாணன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை