புதுப்பட்டு அரசு பள்ளியில் மகிழ்முற்றம் மன்றம் துவக்கம்
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த புதுப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில், மகிழ்முற்றம் மன்றம் துவக்க விழா நடந்தது.விழாவிற்கு, பள்ளி தலைமையாசிரியர் மதியழகன் தலைமை தாங்கினார். உதவி தலைமையாசிரியர் கண்ணன் வரவேற்றார். விழாவில் தலைமையாசிரியர் மதியழகன் மன்ற செயல்பாடுகள் குறித்து பேசுகையில், 'மாணவர்கள் சமத்துவம், சகோதரத்துவம், மொழி, இனம் பாலினம், ஜாதி வேறுபாடுகளை கலைந்து ஒற்றுமையாக வாழும் பண்பினை பெற வேண்டும்' என்றார். ஆசிரியர் செந்திவேலன் மன்றத்தின் நோக்கம் குறித்து பேசினார். உதவி தலைமையாசிரியர் பிச்சை சவரி நன்றி கூறினார்.