உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஊட்டச்சத்து குறைபாடு: கலெக்டர் உத்தரவு

ஊட்டச்சத்து குறைபாடு: கலெக்டர் உத்தரவு

கள்ளக்குறிச்சி: மாவட்டத்தில் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டு நிலையை மேம்படுத்த, அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். மேற்பார்வையாளர்கள், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்களிடம் பல்வேறு தகவல்களை கேட்டறிந்தார். ஊட்டச்சத்து குறைபாடு உள்ள வட்டாரம் மற்றும் தொகுதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. தொடர்ந்து, ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் நிலையை மேம்படுத்த சிறப்பு குழு சுகாதார துறையினருடன் இணைந்து ஆய்வு செய்து கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளுக்கு சிறப்பான ஊட்டச்சத்து உணவு வழங்குவதையும், ஆண்டுக்கு இருமுறை குடற்புழு நீக்க மாத்திரை எடுத்து கொள்வதை உறுதி செய்ய வேண்டும். மாவட்டத்தை ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத மாவட்டமாக மாற்ற தொடர்ந்து பணியாற்ற கலெக்டர் உத்தரவிட்டார்.இதில் மாவட்ட திட்ட அலுவலர் தீபிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி