டாஸ்மாக் விற்பனையாளர்களை தாக்கியவர் கைது
திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் அருகே, டாஸ்மாக் விற்பனையாளர்களை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.அரகண்டநல்லுார் அடுத்த அந்திலி பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. அங்கு கடந்த ஏப்.,18,ம் தேதி அதே ஊரை சேர்ந்த அஞ்சுதன் மகன் கனியமுதன், 20; பூங்கான் மகன் அமுல்ராஜ், 32; ஆகிய இருவரும் சென்று, 2 பீர் வாங்கி, 40 ரூபாய் கடன் கூறினர்.அதற்கு விற்பனையாளர்கள் முரசொலி மாறன் மற்றும் குருவேந்தன் ஆகியோர் மறுப்பு தெரிவித்தனர். ஆத்திரமடைந்த இருவரும், பீர் பாட்டிலை கொண்டு விற்பனையாளர்களை தாக்கினர். இது குறித்த சி.சி.டி.வி., காட்சி, நேற்று முன்தினம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.இதுகுறித்து கடை மேற்பார்வையாளர் வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில், அரகண்டநல்லுார் போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிந்தனர். இந்நிலையில், நேற்று காலை கனியமுதனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அமுல்ராஜை தேடி வருகின்றனர்.