தீபாவளி சீட்டு பணம் ஏமாற்றியவர் கைது
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே தீபாவளி சீட்டு பணத்தை தராமல் ஏமாற்றிய நபரை போலீசார் கைது செய்தனர். உளுந்துார்பேட்டை அடுத்த திருநாவலுாரைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் மலையன், 30; இவரது மனைவி இலக்கியா, 25; இருவரும் செந்தில் முருகன் தீபாவளி சேமிப்பு திட்டம் என்ற பெயரில் தீபாவளி சீட்டு துவங்கி ஒரு நபருக்கு மாதம் 1000 ரூபாய் வீதம் வசூல் செய்தனர்.இவரிடம் எலவனாசூர்கோட்டை அடுத்த கூத்தனுார் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மனைவி சுமதி, 39; என்பவரும் பணம் கட்டி வந்துள்ளாா்.முதிர்வு தேதி முடிந்தும் சுமதிக்கு சேர வேண்டிய பணத்தை தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.இதுகுறித்து சுமதி அளித்த புகாரின் பேரில், திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து மலையனை கைது செய்தனர்.