உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கோவில் சிலை சேதம் ஒருவர் கைது

கோவில் சிலை சேதம் ஒருவர் கைது

கச்சிராயபாளையம்: கடத்துார் கிராமத்தில் கோவில் சிலையை சேதப்படுத்திய நபரை போலீசார் கைது செய்தனர். கச்சிராயபாளையம் அடுத்த கடத்துார் கிராமத்தில் பெரிய நாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு அத்துமீறி உள்ளே சென்ற மர்ம நபர்கள் கோவில் சிலையை சேதப்படுத்தியுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். போலீசாரின் விசாரணையில் கோவில் சிலையை சேதப்படுத்தியது அதே பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் கோவிந்தராஜ், 33; என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கோவிந்தராஜை போலீசார் நேற்று கைது செய்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி