மேலும் செய்திகள்
பிரியாணி சாப்பிட வந்த வாலிபரின் பைக் 'அபேஸ்'
14-Jan-2025
ரிஷிவந்தியம்: வாணாபுரம் அடுத்த அத்தியூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மனைவி மங்கவர்த்தா,35; இவர், நேற்று முன்தினம் மதியம் 1 மணியளவில் அத்தியூர் சந்தைமேட்டில் நின்றிருந்தார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த மர்மநபர் ஒருவர் மங்கவர்த்தாவின் பர்ஸினை திருடிக்கொண்டு தப்பினார். உடன், அங்கிருந்தவர்கள் பைக்கில் சென்ற மர்மநபரை துரத்தி பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.விசாரணையில் மர்மநபர் பாக்கம் கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை மகன் அன்பு,26; என்பது தெரிந்தது. இது குறித்து முருகன் அளித்த புகாரின் பேரில், அன்புவை கைது செய்து, அவரிடமிருந்த பர்ஸ், செல்போன் மற்றும் பைக் ஆகியவற்றை பகண்டைகூட்ரோடு போலீசார் பறிமுதல் செய்தனர்.
14-Jan-2025