உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / நகை, பணம் திருட்டு ஒருவர் கைது

நகை, பணம் திருட்டு ஒருவர் கைது

கள்ளக்குறிச்சி : முடியனுாரில் பணம், நகை திருடிய இருவர் மீது வழக்கு பதிந்து அதில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி அடுத்த முடியனுார் கிராமத்தை சேர்ந்தவர் சக்தி மனைவி சைலஜா, 20; கடந்த 18ம் தேதி இவரது பாட்டி ஆராயி வீட்டில் இருந்த பீரோ உடைத்து, அதிலிருந்த ரூ.25 ஆயிரம் பணம், 1 பவுன் தங்க நகை, வெள்ளி கொலுசு திருடு போனது. இது குறித்து தகவலறிந்த சைலஜா பாட்டி வீட்டிற்கு சென்று பார்வையிட்டார். அப்போது, உறவினர் சிவா மீது சந்தேகம் ஏற்பட்டு விசாரித்ததில், சிவா தனது நண்பருடன் சேர்ந்து திருடியதாக தெரிவித்துள்ளார். இது குறித்து சைலஜா அளித்த புகாரின் பேரில் கண்ணன் மகன் சிவா, 32; கந்தன் மகன் கருப்பையா ஆகிய இருவர் மீதும் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து அதில் சிவாவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ