உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / திருமணமாகாத விரத்தியில் களைக்கொல்லி குடித்தவர் பலி

திருமணமாகாத விரத்தியில் களைக்கொல்லி குடித்தவர் பலி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே திருமணமாகாத விரக்தியில் மதுவில் களைக்கொல்லி மருந்து கலந்து குடித்த கூலித்தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கள்ளக்குறிச்சி அடுத்த குருநாதபுரத்தை சேர்ந்தவர் குருசாமி மகன் செல்வராஜ், 25; கூலித்தொழிலாளி. திருமணமாகாத மன விரக்தியில் இருந்த செல்வராஜ் கடந்த 4ம் தேதி மதுவில் களைக்கொல்லி மருந்து கலந்து குடித்தார். அவரது குடும்பத்தினர் செல்வராஜை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் சேர்த்து முதல் உதவி சிகிச்சை அளித் தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் செல்வராஜ் உயிரிழந்தார். செல்வராஜ் உடல் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை