ஸ்கூட்டரில் இருந்து விழுந்தவர் சாவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அண்ணா நகர் புறவழிச்சாலையில் ஸ்கூட்டரில் இருந்து விழுந்து காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். உளுந்துார்பேட்டை அடுத்த ஊ.கீரனுாரைச் சேர்ந்தவர் குருசாமி மகன் வீரேந்தர், 23; இவர், நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி கருணாபுரத்தைச் சேர்ந்த நித்தீஷ், 25; என்பவருடன் ஸ்கூட்டரில் கள்ளக்குறிச்சிக்கு சென்றார். ஸ்கூட்டரை வீரேந்தர் ஓட்டினார். சென்னை – தேசிய நெடுஞ்சாலையில் கள்ளக்குறிச்சி அண்ண நகர் மேம்பாலம் பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த ஸ்கூட்டர் சென்டர் மீடியன் தடுப்புக் கட்டை மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடன், இருவரும் சேலம் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு, சிகிச்சை பலனின்றி வீரேந்தர் இறந்தார். புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.