உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  கூட்டுறவு நகர வங்கியில் மேலாண் இயக்குநர் ஆய்வு

 கூட்டுறவு நகர வங்கியில் மேலாண் இயக்குநர் ஆய்வு

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலுார் கூட்டுறவு நகர வங்கியில், தமிழ்நாடு மாநில நகர கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, வங்கியில் இருந்து வழங்கப்பட்ட மொத்த கடன் தொகைகளின் விபரத்தை கேட்டறிந்தார். மேலும், மகளிர் சுய உதவி குழு கடன், மாற்றுத் திறனாளிகள் கடன், நகை கடன், வீட்டு அடமான கடன், கல்விக்கடன், கறவை மாட்டு கடன், டாம்கோ டாப்செட்கோ கடன்களின் பதிவேடுகள், அலுவலத்தில் பராமரிக்கப்படும் கோப்புகள், நிலுவை விபரங்கள் குறித்து கேட்டறிந்தார். ஆய்வின்போது, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர்கள் (கள்ளக்குறிச்சி) முருகேசன், (விழுப்புரம்) விஜயசக்தி, திருக்கோவிலுார் நகர கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் விஜயகுமாரி, முதுநிலை ஆய்வாளர் சத்யா, பொது மேலாளர் பிரபாகரன், உதவி பொதுமேலாளர் ஜோதி மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ