உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மண்டல பூஜை நிறைவு விழா

மண்டல பூஜை நிறைவு விழா

ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சியில் பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு கடந்த பிப்., 10ம் தேதி கும்பாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து தினமும் நடந்த மண்டல பூஜையில், மூலவர் மற்றும் உற்சவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிேஷகம் முடிந்து, 48வது நாளையொட்டி மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. நிகழ்ச்சியில், விக்னேஷ்வர பூஜை, கலச ஆவகாணம், மகா பூர்ணாகுதி, உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு, மூலவர் வரதராஜபெருமாள் உள்ளிட்ட சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ