கள்ளக்குறிச்சி பகுதியில் மஞ்சு விரட்டு போட்டிகள்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியில் காணும் பொங்கலையொட்டி, மஞ்சுவிரட்டு போட்டிகள் நடந்தது.ஏமப்பேர் இளைஞர் மன்றம் சார்பில் 68ம் ஆண்டு பொங்கல் விழா விளையாட்டு போட்டிகள் கடந்த 4 நாட்களாக நடத்தப்பட்டது.4ம் நாளான நேற்று காணும் பொங்கலையொட்டி மஞ்சு விரட்டு போட்டி நடத்தப்பட்டது. இதில், ஏராளமான வாலிபர்கள் 75க்கும் மேற்பட்ட காளைகளை ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து விரட்டிச் சென்று பிடித்து விளையாடினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஏமப்பேர் இளைஞர் மன்ற தலைவர் கண்ணன், செயலாளர் ராஜா உள்ளிட்டவர்கள் பரிசு வழங்கினர்.