மேலும் செய்திகள்
கருமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
09-Jun-2025
ரிஷிவந்தியம்: பாவந்துாரில் மாரியம்மன் கோவில் தீமிதி மற்றும் தேர் திருவிழா நடந்தது.ரிஷிவந்தியம் அடுத்த பாவந்துார் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த மே மாதம் 20ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் காலை, மாலையில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், சக்தி அம்மன் பிறப்பு, மாரியம்மன் முத்து வரம் வாங்குதல், கன்னிமார் பூ எடுத்தல், காத்தவராயன் பிறப்பு உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடந்தது.கடந்த 4ம் தேதி காத்தவராயன் ஆரியமாலா திருக்கல்யாணமும், ஊரணி பொங்கல் வைத்தல் நடந்தது. பொதுமக்கள் பலர் பொங்கல் வைத்து சுவாமி வழிபாடு செய்தனர். நேற்று முன்தினம் காலை நடந்த தீமிதி திருவிழாவில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர். அதைத் தொடர்ந்து நடந்த தேர் திருவிழாவில் பொதுமக்கள் தேர் வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
09-Jun-2025