உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்

மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்

ரிஷிவந்தியம்; ஓடியந்தலில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது.வாணாபுரம் அடுத்த ஓடியந்தல் கிராமத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 19ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து, புண்ணியாவஜனம், வாஸ்து சாந்தி, கணபதி ஹோமம், நவக்கிரக பூஜை, லட்சுமி ஹோமம், கோ பூஜை மற்றும் யாக சாலை பூஜைகள் நடந்தது.நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜையை தொடர்ந்து காலை 10 மணியளவில் கோவில் கலசத்திற்கு புனித நீருற்றி கும்பாபிேஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ