உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாசில்லா தீபாவளி : விழிப்புணர்வு வாகனம்

மாசில்லா தீபாவளி : விழிப்புணர்வு வாகனம்

கள்ளக்குறிச்சி: மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மாசில்லா தீபாவளி பண்டிகை கொண்டாடுவது தொடர்பான விழிப்புணர்வு வாகனம் துவக்கி வைக்கப்பட்டது. கலெக்டர் பிரசாந்த் விழிப்புணர்வு வாகனத்தை துவக்கி வைத்து, துண்டு பிரசுரங்கள் வழங்கினார். அதில் அரசு அறிவித்துள்ள குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும். குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசு தன்மை கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். மருத்துவனை, பள்ளிகள், நீதிமன்றங்கள் உள்ளிட்ட அமைதி பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்க கூடாது உட்பட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்றன. மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் ராம்குமார் உட்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி