உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மருத்துவ கல்லுாரியில் சேர்க்கை: அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

மருத்துவ கல்லுாரியில் சேர்க்கை: அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

கள்ளக்குறிச்சி; அரசு பள்ளிகளில் பிளஸ் 2 படித்து 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் அரசு மருத்துவக் கல்லுாரிகளில் மருத்துவம் படிக்க இடம் பிடித்த 7 மாணவர்களுக்கு கள்ளக்குறிச்சியில் பாராட்டு விழா நடந்தது. ரோட்டரி சங்கம் சார்பில் நடந்த விழாவிற்கு, ரோட்டரி சங்க தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தார். பொருளாளர் முருகன் வரவேற்றார். மாநில அளவில் முதலிடமும் பிடித்த திருக்கோவிலுார் மாணவர் திருமூர்த்தி, மாநிலத்தில் 3ம் இடம் பிடித்த எஸ்.ஒகையூர் மாணவி மதுமிதா மற்றும் ஜெயஸ்ரீ, ஹரிசங்கர், பாக்கியராஜ், ரூபிகா, கோபிகா ஆகியோர்களுக்கு டாக்டர் சுரேஷ் பரிசு வழங்கி கவுரவித்தார். ரோட்டரி சங்க ஆளுநர் தேர்வு செந்தில்குமார், மூத்த உறுப்பினர் ஞானராஜ், முன்னாள் தலைவர்கள் பெருமாள், ராமலிங்கம், மூர்த்தி, எத்திராஜ், சுரேஷ்பாபு, மதியழகன், சசிகுமார் பாராட்டினர். தொடர்ந்து மாணவி மதுமிதா பாட புத்தகங்களுக்கு ஆகும் செலவை ரோட்டரி சங்கம் சார்பில் முன்னாள் தலைவர் சஞ்சீவ்குமார் ஏற்றுக் கொள்வதாக உறுதி அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை