உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஆலத்துார் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர் கல்வி திட்ட முகாம்

ஆலத்துார் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர் கல்வி திட்ட முகாம்

கள்ளக்குறிச்சி: ஆலத்துார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில், கூட்டுறவு துறை சார்பில் உறுப்பினர் கல்வி திட்ட முகாம் நடந்தது.கள்ளக்குறிச்சி அடுத்த ஆலத்துாரில் நடந்த உறுப்பினர் கல்வி திட்ட முகாமிற்கு கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தலைமை தாங்கினார். செயலாட்சியர் சவிதாராஜ், கள அலுவலர் லட்சுமி முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக சேருவதன் மூலம் கிடைக்கும் பயன்கள் குறித்தும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன், விவசாயிகளுக்கு பயிர்கடன், நகைக்கடன் மற்றும் கல்விக்கடன் ஆகியவற்றை எளிதில் பெறலாம் என அறிவுறுத்தப்பட்டது.தொடர்ந்து, விழுப்புரம் 'டான்பெட்' சார்பில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வேளாண்மை இடுபொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டது. கூட்டத்தில் 'டான்பெட்' அலுவலர் செந்தில், கூட்டுறவு சங்க செயலாளர்கள் மாணிக்கம், சக்திவேல், உர நிறுவன அலுவலர்கள், சங்க பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ