உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / புதிய கலெக்டர் அலுவலகம் வரும் டிச., மாதம் திறப்பு அமைச்சர் வேலு தகவல்

புதிய கலெக்டர் அலுவலகம் வரும் டிச., மாதம் திறப்பு அமைச்சர் வேலு தகவல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி புதிய கலெக்டர் அலுவலகத்தை வரும் டிச., மாதம் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக திறந்து வைக்க உள்ளதாக அமைச்சர் வேலு தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில் ரூ.139.41 கோடி மதிப்பில் 35 ஏக்கர் பரப்பளவில் 8 தளங்களை கொண்ட புதிய கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமான பணிகளை அமைச்சர் வேலு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர் பிரசாந்த், டி.ஆர்.ஓ., ஜீவா, மலையரசன் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் உடனிருந்தனர். தொடர்ந்து அமைச்சர் வேலு நிருபர்களிடம் கூறியதாதவது; கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகள் சுமார் 95 சதவீதம் முடிந்துள்ளது. இதர பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எஞ்சியுள்ள பணிகள் வரும் 30ம் தேதிக்குள் முழுமையாக முடிந்து விடும். தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலினிடம் அனுமதி பெற்று அடுத்த மாதம் முதல்வர் நேரடியாக வந்து திறந்து வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என கூறினார்.

பஸ் நிலையம் ஆய்வு

கள்ளக்குறிச்சி ஏமப்பேர் புறவழிச்சாலை ரவுண்டானா அருகில் ரூ.16.21 கோடி மதிப்பில் 5.5 ஏக்கர் பரப்பளவில் புதிதாக புறநகர் பஸ் நிலையம் கட்டும் பணி நடக்கிறது. கட்டுமான பணிகளை அமைச்சர் வேலு ஆய்வு செய்தார். பஸ் நிலைய கட்டுமானப் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது நகர்மன்ற சேர்மன் சுப்ராயலு, நகராட்சி ஆணையர் சரவணன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை