முதல்வர் விழா முன்னேற்பாடு அமைச்சர் வேலு ஆய்வு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் முதல்வர் பங்கேற்கும் விழா முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார். தமிழக முதல்வர் ஸ்டாலின் வரும் ௨௬ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்கிறார். அதனையொட்டி, வீரசோழபுரம் தேசிய நெடுஞ்சாலை அருகில் விழா பந்தல் அமைத்தல் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை மாவட்ட பொறுப்பு அமைச்சர் வேலு நேற்று ஆய்வு செய்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0lcvwr80&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பின், விழா மேடை அமைக்கும் இடம், பயனாளிகள் அமரும் இடம், முக்கியப் பிரமுகர்கள் வருகை, வாகனம் நிறுத்துமிடம், குடிநீர் வசதி, கழிவறை வசதி, அடிப்படை வசதிகள் மேற்கொள்ளுதல், பாதுகாப்பு ஏற்பாடுகள், நலத்திட்ட உதவி ஏற்பாடுகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். கலெக்டர் பிரசாந்த், எம்.எல்.ஏ.,க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.