உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாயமான வாலிபர் சடலமாக மீட்பு

மாயமான வாலிபர் சடலமாக மீட்பு

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அருகே இறந்த நிலையில் இருந்தவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். உளுந்துார்பேட்டை அடுத்த கா.பாளையத்தை சேர்ந்தவர் சீனுவாசன் மகன் சிவராஜ், 27; இவர், கடந்த 11ம் தேதி இரவு தனது பைக்கில் ரிஷிவந்தியம் சென்றார். நீண்ட நேரமாகியும் சிவராஜ் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை பிரிவிடையாம்பட்டு பஸ் நிறுத்தம் அருகே சிவராஜ் இறந்த நிலையில் கிடப்பதாக தகவல் கிடைத்தது. அவரது குடும்பத்தினர் மற்றும் ரிஷிவந்தியம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து உயிரிழந்து கிடப்பது சிவராஜ் என்பது உறுதி செய்யப்பட்டது. அவரது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து அவரது தாய் துளசி பிருந்தா அளித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை