உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சர்க்கார் ஜாகையில் வசித்தவர்களுக்கு வீட்டுமனை பட்டா எம்.எல்.ஏ., வழங்கல்

சர்க்கார் ஜாகையில் வசித்தவர்களுக்கு வீட்டுமனை பட்டா எம்.எல்.ஏ., வழங்கல்

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் அரசு இடத்தில் வசித்தவர்களுக்கு எம்.எல்.ஏ., மணிக்கண்ணன் வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். உளுந்தூர்பேட்டை நகராட்சியில் மத்திய அரசின் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள சர்க்கார் ஜாகை இடத்தில் பலர் பல ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். ஆனால் அந்த இடத்திற்கான பட்டா ஏதும் வழங்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் அரசு இடத்தில் வசிக்கும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என சட்டசபையில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் பேரில் அங்கு வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் பேரில் அந்த பகுதியில் குடியிருந்து வரும் 285 பேரில் 90 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நேற்று உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ., மணிக்கண்ணன் தலைமை தாங்கி வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். தாசில்தார் அனந்தகிருஷ்ணன், நகராட்சி சேர்மன் திருநாவுக்கரசு, துணை சேர்மன் வைத்தியநாதன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் டேனியல்ராஜ், நகராட்சி கவுன்சிலர்கள் கலாசுந்தரமூர்த்தி, சாந்தி மதியழகன், மாலதி ராமலிங்கம், பூபதி, குருமனோ உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி