மேலும் செய்திகள்
டாக்டர்களுக்கு பதவி உயர்வு இல்லாத கால்நடைத்துறை
27-Nov-2024
கள்ளக்குறிச்சியில் மின்துறையில் கடந்த 2008ம் ஆண்டு உதவிப் பொறியாளராக பணியில் சேர்ந்த ஒருவர். துறையில் பணமழை கொட்டுவதை கண்ட அவர், தனது சொந்த செல்வாக்கையும், 'ப விட்டமின்' பலத்தையும் பயன்படுத்தி, கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியிலேயே உள்ளூரிலேயே அங்குமிங்குமாக இடமாற்றம் பெற்று பணி புரிந்து வருகிறார்.பணியில் சேர்ந்தது முதல் 12 ஆண்டுகள் ஒரே பதவியில் இடமாறுதலின்றி இருந்தார். கடந்த 2020-ம் ஆண்டு செயற்பொறியாளராக பதவி உயர்வு பெற்ற பிறகும், இட மாறாமல் மிக்க செழிப்புடன் தனது பணியை தொடர்ந்து வருகிறார்.ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்திடும் அரசு உத்தரவுகள் இருந்தும், இந்த அதிகாரி எந்த ஒரு மாற்றமும் இல்லாமல், பணியாற்றி வருகிறார்.இவரது இந்த சாதனையை பார்த்து பிற துறையை சேர்ந்த அதிகாரிகள் நமக்கு இதுபோன்று வாய்ப்பு கிடைக்கவில்லையே என அங்கலாய்த்து வருகின்றனர்.
27-Nov-2024