ஓட்டலில் கல்லா பெட்டி உடைத்து பணம் திருட்டு
கள்ளக்குறிச்சி : தனியார் ஓட்டலில் கல்லா பெட்டியை உடைத்து பணம் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் உள்ள பிரபல தனியார் ஓட்டலில் கடந்த 22ம் தேதி இரவு வழக்கம்போல் வரவு செலவு கணக்கு பார்த்துவிட்டு ஓட்டல் மூடப்பட்டது. மறுநாள் நாள் 23ம் தேதி காலை 5:00 மணிக்கு ஹோட்டல் திறந்து பார்த்தபோது, மர்ம நபர்கள் கல்லா பெட்டியை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடி சென்றது தெரிந்தது. பெட்டியில் ரூ.2 ஆயிரம் பணம் இருந்தது. ஓட்டல் உதவி மேலாளர் சதீஷ்குமார் அளித்த புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.