உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குளிர்பான குடோனில் பணம் திருட்டு: 3 பேர் கைது

குளிர்பான குடோனில் பணம் திருட்டு: 3 பேர் கைது

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அருகே தனியார் குளிர்பான குடோனில், 60 ஆயிரம் ரூபாயை திருடிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி அருகே, பாக்கத்தை சேர்ந்தவர் அய்யாசாமி மகன் அசோக்குமார்,22; நீலமங்கலம், தனியார் குளிர்பான குடோனில் மேலாளராக பணிபுரிகிறார். விற்பனை பணத்தை தினசரி இரவு லாக்கரில் வைத்து, அடுத்த நாள் வங்கி கணக்கில் செலுத்துவது வழக்கம். கடந்த பிப்ரவரியில், 60 ஆயிரம் ரூபாயை, லாக்கரில் வைத்து பூட்டி, சாவியை மேஜையில்வைத்து விட்டு சென்றார். அடுத்த நாள் பார்த்த போது, பின்பக்க ெஷட்டரை உடைத்து லாக்கரில் இருந்த பணத்தை மர்ம ஆசாமிகள் திருடியது தெரிந்தது. இதுகுறித்து, கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், சப் இன்ஸ்பெக்டர்கள் விஜயராகவன், ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் நீலமங்கலத்தில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, சந்தேகத்திற்குரிய வகையில் நின்றிருந்த, 3 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அந்த மூவரும், நீலமங்கலம் புதுகாலனி சண்முகம் மகன் சிலம்பரசன்,25;, அய்யனார் மகன் திருவேங்கடம்,23;, நீலமங்கலம் வடக்கு தெரு ஆறுமுகம் மகன் விஷ்ணு, 22; என தெரிந்தது. இதில் பணம் திருடுபோன குடோனில் கடந்த சில ஆண்டுகளாக, திருவேங்கடம் வேலை பார்த்ததும், சிலம்பரசனின் பைக்கிற்கு லோன் கட்ட , 3 பேரும் சேர்ந்து, குடோனில் பணத்தை திருடியது கண்டறியப்பட்டது. அந்த 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 17 ஆயிரத்து 900 ரூபாய் மற்றும் மொபைலை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !