/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்பு: தாய், 2 மகன்கள் கைது ரூ. 25 லட்சம் நகை, பணம் பறிமுதல்
பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்பு: தாய், 2 மகன்கள் கைது ரூ. 25 லட்சம் நகை, பணம் பறிமுதல்
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய தாய் மற்றும் மகன்களை போலீசார் கைது செய்து, 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, பணத்தை பறிமுதல் செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூர்கோட்டை சப் இன்ஸ்பெக்டர்கள் பிரபாகரன், குமரேசன், கோவிந்தராஜ் மற்றும் போலீசார் நேற்று எறையூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக பைக்கில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.அதில் அவர்கள், கூத்தனுார் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் மகன்கள் விஜய், 28; விக்னேஷ், 24; இருவரும் பல்வேறு இடங்களில் வீடு புகுந்து திருடியதும், இதற்கு, இவர்களின் தாய் வீரம்மாள், 50; உடந்தையாக இருந்தது தெரியவந்தது.மூவர் மீதும் வழக்குப் பதிந்து, 2 பைக்குகள், 42 சவரன் நகை, 80 ஆயிரம் ரூபாய், 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை பறிமுதல் செய்தனர்.