உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சந்தப்பேட்டை சாலையில் தேங்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி

சந்தப்பேட்டை சாலையில் தேங்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார், சந்தப்பேட்டையில் ஒரு கோடி மதிப்பில் விரிவுபடுத்தப்பட்ட சந்திப்பு சாலையில் தண்ணீர் குளம் போல் தேங்குவதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். திருக்கோவிலுார் தீயணைப்பு நிலையம் அருகே குறுகலான மும்முனை பிரிவு சாலை ரூ. 1 கோடி மதிப்பில் சமீபத்தில் மேம்படுத்தப்பட்டது. வரைபடம் படி மேம்படுத்தாமல், சாலை நடுவே ரவுண்டானா அமைத்தனர். இதனால் வாகன ஓட்டிகளுக்கு குழப்பம் ஏற்பட்டு அடிக்கடி விபத்து நடந்து வருகிறது. சமீபத்தில் பெய்த மழையால் ரவுண்டானாவிற்குள்ளும், தீயணைப்பு நிலையம் முன்பு சாலையில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகின்றனர். தீயணைப்பு நிலையம் அருகே ஆர்.டி.ஓ., அலுவலகம் உள்ளது. திட்ட வரைபடத்தின்படி சாலை அமைக்காதால், மழைநீர் குளம்போல் தேங்கி நிற்பதாகவும், இதனை நெடுஞ்சாலை பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை