வெள்ள நிவாரண பணிக்கு எம்.பி., ரூ.1 லட்சம் வழங்கல்
கள்ளக்குறிச்சி:வெள்ள நிவாரண பணிக்காக கள்ளக்குறிச்சி எம்.பி., ஒரு லட்சம் ரூபாய் நிதியை துணை முதல்வரிடம் வழங்கினார்.பெஞ்சல் புயலை தொடர்ந்து பெய்த கனமழை மற்றும் தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், ஏராளமானோர் வீடுகளை இழந்தனர். விளைநிலங்களில் தண்ணீர் தேங்கியதால் பயிர்கள் சேதமடைந்தன. வெள்ள பாதிப்பை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின், மழை, வெள்ளத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கும், விவசாய பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்தார்.இந்நிலையில், வெள்ள நிவாரண பணிகளுக்காக தமிழக எம்.பி.,க்கள் அனைவரும் தலா ஒரு லட்சம் ரூபாயை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க உள்ளதாக, நாடாளுமன்ற குழுத்தலைவர் பாலு அறிவித்திருந்தார்.அதன்படி, கள்ளக்குறிச்சி எம்.பி., மலையரசன் வெள்ள நிவாரண பணிக்காக 1 லட்ச ரூபாயை சென்னையில் துணை முதல்வர் உதயநிதியிடம் வழங்கினார்.