மேலும் செய்திகள்
சொல்கிறார்கள்
08-Nov-2026
வாகனம் மோதி பெண் பலி
20-Oct-2026
உளுந்துார்பேட்டை: திருநாவலுார் அருகே நாதஸ்வர கலைஞர் துாக்கிட்டு இறந்தது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். உளுந்துார்பேட்டை தாலுகா சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி, 42; இவர் நாதஸ்வர கலைஞர். இவரது மனைவி சங்கீதா, 40; இருவருக்கும் திருமணம் நடந்து 18 ஆண்டுகளாகிறது. இவர்களுக்கு அஸ்வினி, 14; இஷானா ,12; ஆகிய இரு மகள்கள் உள்ளனர். கடந்த 9ம் தேதி காலையில் செங்குறிச்சிக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள். நண்பர்கள் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து சங்கீதா கொடுத்த புகாரின் திருநாவலுார் போலீசார் பாலாஜி, காணாமல் போனதாக வழக்கு பதிந்து தேடி வந்தனர். இந்நிலையில் உளுந்துார்பேட்டை தாலுகா வண்டிப்பாளையம் சுப்பிரமணியன் என்பவரின் முந்திரி தோப்பில் , முந்திரி மரத்தில் பாலாஜி வேட்டியால் துாக்கிட்டு இறந்த நிலையில் கிடந்தார். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாலாஜியின் உடலை மீட்டு உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில் திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்னர்.
08-Nov-2026
20-Oct-2026