உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தேசிய கராத்தே போட்டி மாணவர்கள் சாதனை

தேசிய கராத்தே போட்டி மாணவர்கள் சாதனை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஜப்பான் ஷிட்டோ ரியூ கராத்தே பள்ளி மாணவர்கள் ஊட்டியில் நடந்த தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்று சாதனை படைத்தனர். நீலகிரி மாவட்டம், ஊட்டி அண்ணா விளையாட்டு அரங்கில் உலக யுனைடெட் கராத்தே சங்கம் சார்பில், 14வது தேசிய அளவிலான கராத்தே போட்டி நடந்தது.பல்வேறு மாநிலங்களில் இருந்து 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் கள்ளக்குறிச்சி ஜப்பான் ஷிட்டோ ரியூ கராத்தே பள்ளி மாணவர்கள் 20 பேர் மாஸ்டர் பாஸ்கர் தலைமையில் சென்று பங்கேற்றனர்.அதில், கட்டா பிரிவில் 8 பேர் முதலிடம், குமுத்தே பிரிவில் 7 பேர் முதலிடம், 5 பேர் இரண்டாமிடம் பிடித்து சாதனை படைத்தனர். இவர்களுக்கு நீலகிரி எஸ்.பி., நிஷா சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ