உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம்

தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம்

திருக்கோவிலுார்: திருக்கோவிலூர் பெண்கள் மேல்நிலை பள்ளியில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வல துவக்க விழாவிற்கு தலைமை ஆசிரியர் சுதா வரவேற்றார். தாசில்தார் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். சப் கலெக்டர் ஆனந்த் குமார் சிங், விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். ஊர்வலத்தில் பங்கேற்ற மாணவிகள் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். தொடர்ந்து மாணவிகளுக்கு பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது. தேர்தல் துணை தாசில்தார் சிட்டிபாபு, வருவாய் ஆய்வாளர் அன்பரசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சங்கராபுரம்:

பஸ் நிலையத்தில் இருந்து துவங்கிய ஊர்வலத்திற்கு தாசில்தார் சசிகலா தலைமை தாங்கினார். தேர்தல் துணை தாசில்தார் மணிமாறன் முன்னிலை வகித்தார்..தேர்தல் உதவியாளர் தனசேகரன் வரவேற்றார். சங்கராபுரம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.ஊர்வலத்தில் ரோட்டரி முன்னாள் துணை ஆளுனர் முத்துக்கருப்பன், அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளர் குசேலன், ரோட்டரி முன்னாள் தலைவர் சுதாகரன்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை